அவதுாறு பேச்சு; ஐவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவதுாறு பேச்சு; ஐவர் மீது வழக்கு

Added : மே 14, 2020
Share

போத்தனூர்:அனுமன் சேனா கட்சியின் நிறுவன தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2ல் அனுமன் சேனா (இந்து மக்கள் கட்சி தமிழகம்) நிறுவன தலைவர் ஸ்ரீதர் உள்பட, 30க்கும் மேற்பட்டோர் போத்தனூர், ரயில்வே மேம்பாலம் அருகே கூடியுள்ளனர். அவர்களுக்கிடையே ஸ்ரீதர் ஊரடங்கு மற்றும், அதிகாரிகள் நடவடிக்கை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வாட்ஸ் ஆப்'பில் பரவியது. இதையடுத்து போத்தனூர் போலீசார், ஸ்ரீதர், செல்வராஜ், முருகன், ஸ்ரீபரத் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, ஸ்டேஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X