பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் இடமாற்றம் 

Added : மே 14, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்ட காய்கறி மொத்த மார்க்கெட் கொரோனா ஊரடங்கால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மார்க்கெட்டிற்கு தினமும் ஐநுாறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்வர். நுாறுக்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் வந்து செல்லும். நெருக்கடியான இடத்தில் இயங்கி வந்த மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடித்தல்,

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்ட காய்கறி மொத்த மார்க்கெட் கொரோனா ஊரடங்கால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மார்க்கெட்டிற்கு தினமும் ஐநுாறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்வர். நுாறுக்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் வந்து செல்லும். நெருக்கடியான இடத்தில் இயங்கி வந்த மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றில் மெத்தனபோக்கு நிலவியது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்த, ஆண்டிபட்டி சேடபட்டியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து காய்கறி மொத்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்டிபட்டி அரசு கல்லுாரி மைதானத்திற்கு இந்த மார்க்கெட் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள் ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X