பீஜிங் : இந்தியா- - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான், தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள, பன்காங் சோ ஏரி பகுதியில், இந்திய - - சீன எல்லைப் பகுதி உள்ளது. இங்கு, கடந்த, 5 மற்றும் 6ல், இருநாட்டு படையினர் மத்தியில் பதற்றம் நிலவியது.இந்திய எல்லைப்பகுதிக்கு மிக அருகே, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள், வட்டமிட்டன. பதிலுக்கு, இந்திய ராணுவத்தின், 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், சீன எல்லைப்பகுதியில் சுற்றி வந்தன. இதனால், இரு நாட்டு வீரர்கள் இடையே, சண்டை மூளும் அபாயம் உருவானது. இது குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான், கூறியதாவது:எல்லை விவகாரத்தில், சீனாவின் நிலை
ப்பாடு தெளிவாக உள்ளது. அங்கு, சீன படையினர், அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். வழக்கமான ரோந்தப் பணியில் தான், சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் நல்லுறவு பாதிக்கப்படாமல் இருக்கவே, சீனா விரும்புகிறது. அதை மேம்படுத்த, இந்திய படையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE