தேவதானப்பட்டி:முகக்கவசம் அணியவில்லை என்றால் கடைகளில் பொருள் வழங்கப்படாது என ஜெயமங்கலம் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. ஜெயமங்கலத்தில் லாரி டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பொருட்கள் வழங்கப்படாது எனக்கூறி வர்த்தக சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள் ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE