தமிழ்நாடு

மதுரையில் சரக்கு லாரிகள் வாடகை உயர்வு 12 சதவீதம்..! அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மதுரையில் சரக்கு லாரிகள் வாடகை உயர்வு  12 சதவீதம்..!  அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பு


ஊரடங்கில் மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் சரக்கு லாரிகளை இயக்க முடியாமல் போனது. இதனால் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வால் மதுரையில் லாரி போக்குவரத்து துவங்கியுள்ளது.லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது: ஊரடங்கு தளர்வுக்கு பின் மதுரை, சென்னை, கேரளா, பெங்களுரூ என 500 கி.மீ.,க்கு உள்ளிட்ட நகரங்களுக்கு மதுரையில் இருந்து 50 சதவீத சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்காததால் வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளை இயக்க முடியவில்லை.ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருக்கும் நிலையில் ரூ.66 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69 ஆக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட 12 சதவீதம் வரை லாரி வாடகையை உயர்த்தியுள்ளோம். டீசல் விலையை குறைக்கவும், எங்களுக்கு நிதி உதவி அளிக்கவும் அரசு முன் வந்தால் ஓரளவுக்கு எங்கள் தொழில் மீண்டும் முன்னேறும், என்றார்.லாரி வாடகை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:56:58 IST Report Abuse
Lion Drsekar During this crisis allowing these types of activities to be controlled. Other wise next step, govt officials will fight for their salary hike and so on, where as people are jobless idle at home. If the private people are dictating terms like this, Govt should engage lorries like water tanker and maintain the price to balance the present economy, Vandhe madaram
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X