தமிழ்நாடு

ஓட்டல்களில் சமூக இடைவெளிவிட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்

Added : மே 14, 2020
Share
Advertisement

மதுரை நான்காவது முறையாக நீட்டிக்கப்படும் ஊரடங்கில்,அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு ஓட்டல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதால் பல ஓட்டல்கள் செயல்பட முடியாததால் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துஉள்ளனர்.மதுரை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் கே.எல். குமார் கூறியதாவது: கடந்த 45 நாட்களுக்கும்மேலாக பல ஓட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது 4வது ஊரடங்கில் தொழில் விஷயங்களுக்கு சில சலுகைகள்அளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.மே 18 முதல் ஓட்டல்களில் ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டும், நின்று கொண்டும் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும். கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்திய பிறகே வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க தயாராக உள்ளோம். தவிர, கார் பார்க்கிங் வசதியுள்ள ஓட்டல்களில், காரில் வைத்து உணவு பரிமாறவும் தயாராக உள்ளோம். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X