வடமதுரை:கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழலில் கால்நடை, கோழிப் பண்ணை களில்கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறை குறித்து கால்நடைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பண்ணைக்கு புதிய நபர்கள், விற்பனையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் அனைவரும் கைகளை அடிக்கடி ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும். சோப்பால் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கோழிக் குஞ்சுகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வரும்போது குஞ்சுகள் இருக்கும் பிளாஸ்டிக் கிரேட் அல்லது கூண்டுகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இறைச்சியாக மாற்றி விற்பனை செய்யும்போது உபகரணங்களை முறையாக கழுவி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். தீவனம், நீர்தட்டுகள், உபகரணங்கள் அனைத்தையும் சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும். பண்ணையில் பயன்படுத்தும் வாகனம் மற்றும் பண்ணைக்குள் வரும் வாகனங்களின் சக்கரங்களை லைசால் மூலம் சுத்தம் செய்ய வேண்டும், என அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE