சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : மே 14, 2020
Share
Advertisement

உண்ணாவிரதம்: தந்தை, மகள் கைதுமதுரை: புதுார் நந்தினி. மதுவுக்கு எதிராக தொடர்ந்து தந்தை ஆனந்தன் உடன் இணைந்து போராடி வருகிறார். இருநாட்களுக்கு முன் விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க., நிர்வாகிகளால் பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்பு நேற்று தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நந்தினி அறிவித்தார். நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட இருவரையும் போலீசார் கைதுசெய்து மாலையில் விடுவித்தனர்.

போக்சோவில் கைது
மதுரை: ஊமச்சிக்குளம் அருண்குமார் 22. வீட்டில்இருந்த மனைவியின் 15 வயது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததில் கர்ப்பிணியானார். போக்சோ சட்டத்தில் அருண்குமார் கைது செய்யப்பட்டார்.
சமூகவலைதளத்தால் கைது

மதுரை: கொரோனா ஊரடங்கால் மதுரை சித்திரை திருவிழா ரத்தானது. இதற்கு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் எனக்கூறி சமூகவலைதளத்தில் சிவா என்ற முத்துசிவா என்பவர் கருத்து பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தாசில்தார் நகர் சையது அகமது பாஷா என்பவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். முத்துசிவா கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு

மேலுார்: அட்டப்பட்டி பகுதியில் ஏ.டி.எஸ்.பி., வனிதா தலைமையில் போலீசார் சென்ற போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை ஆய்வு செய்தனர். அனுமதியின்றி தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராஜா இடத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிரைவர் சுரேைஷ 26, கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளரான கவுன்சிலர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வியாபாரியிடம் வழிப்பறி

மதுரை: சம்பக்குளம் பால்பாண்டி 70. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு இரவு 1:30 மணிக்கு டூவீலரில் சென்றார். ஒத்தக்கடை அய்யப்பன் நகரில் வந்தபோது டூவீலரில் வந்த 3 பேர், பால்பாண்டியை வழிமறித்து ரூ.11,500ஐ வழிப்பறி செய்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.கண்மாயில் ஆண் பிணம்மேலுார்: சாலைக்கிபட்டி நான்கு வழிச்சாலை அருகே உள்ள பெரிய கண்மாயில் 30 வயது மதிக்க தக்க ஆண் இறந்து கிடந்தார். கரையில் 20க்கும் மேற்பட்ட வாத்துக்களும் இறந்து கிடந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X