மதுரை மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் செயல்படும் தற்காலிக மொத்த மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆய்வு செய்தார். அப்போது கரிமேட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 5 கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் அதன் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். கரிமேட்டில் உள்ள அக்கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.மாட்டுத்தாவணி மொத்த பழ மார்க்கெட்டில் இருந்து டி நோபிலி பள்ளிக்கு இடமாற்றப்பட்ட 45 கடைகளை கலெக்டர் வினய், கமிஷனர் விசாகன்ஆய்வு செய்தனர். உதவி கமிஷனர்கள் ஜெயராமரஜா, பிரேம் குமார், மணியன், சேகர் உடனிருந்தனர்.திருமங்கலம்நகராட்சி பகுதிகளில் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜவுளிக்கடைகள், நகை கடைகள் நேற்று வரை திறக்க அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் திருமங்கலம் - உசிலம்பட்டி ரோடு பகுதியில் திறந்திருந்த 3 ஜவுளி கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE