சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பி உரசியதால் உருக்குலைந்த லாரி

Added : மே 14, 2020
Share
Advertisement
 மின் கம்பி உரசியதால் உருக்குலைந்த லாரி

வேடசந்துார்:வேடசந்துார் புளியமரத்துக்கோட்டை சரவணக்குமாருக்கு சொந்தமான லாரியை, ஆத்துார் அய்யம்பாளையம் தேவதாஸ் ஓட்டிவந்தார்.

ஓசூர் - மதுரை இடையே ரெகுலராக செல்லும் இந்த லாரி, நேற்று வீட்டில் நிறுத்தப் பட்டிருந்தது.அப்போது சுரேஷ் என்பவர், தமுத்துப்பட்டியில் இருந்து சோளத்தட்டை லோடு ஏற்றி வரும் படியும் கூறினார். தேவதாஸ் சோளத்தட்டையை ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.

மெயின் ரோட்டில் லாரியை ஏற்ற முயற்சித்தபோது, அப்பகுதியில் இருந்த மின்சார ஒயரில் மேற்பகுதி உரசியதில் தீப்பற்றியது. மள மளவென தீ பரவியதால் லாரியை நிறுத்தி தப்பினார். வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. கூம்பூர் போலீசார் விசாரிகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X