பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காவுக்கு வந்த செவிலியர்கள்: பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

Added : மே 14, 2020
Share
Advertisement
 பூங்காவுக்கு வந்த செவிலியர்கள்:  பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த செவிலியர்களை, பூங்கா ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், நர்சிங் மாணவி கள், ஆஷா பணியாளர் உட்பட, 600க்கு மேற்பட்டவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுகாதார துறையை சேர்ந்த, 120 பேர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பூங்காவை ரசித்து சென்றனர்.இந்நிலையில், ஊட்டி மற்றும் கூடலுார் வட்டத்தை சேர்ந்த, 70 செவிலியர்கள் தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர். பூங்கா ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின், பூங்காவில் உள்ள பல வண்ண மலர்களை ரசித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X