பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி அரசின் அறிவிப்பால் 'அலர்ட்'

Added : மே 14, 2020
Share
Advertisement

பந்தலுார்:நீலகிரி எல்லையை ஒட்டிய கேரள பகுதிகள், 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டதால், மாவட்ட சுகாதார துறையினர் 'அலர்ட்' ஆகி உள்ளனர்.நீலகிரி எல்லையில் உள்ள, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், கொரோனா தாக்கம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த பத்து நாட்களுக்குள், 11 மாத குழந்தை உட்பட, 8 பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில், நீலகிரி மாவட்ட எல்லையான நம்பியார்குன்னு பகுதிக்கு அருகில் உள்ள, கேரள சீரால் பகுதியில், கோயம்பேடு மார்க்கெட்டில் குறுமிளகு கடையில் வேலை செய்து திரும்பிய ஒருவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மானந்தவாடி, மீனங்காடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கத்தால், 7- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,கேரள- தமிழக எல்லை பகுதிகளான, நென்மேனி ஊராட்சி, இடவகை ஊராட்சி பகுதிகள் கொரோனா 'ஹாட் ஸ்பாட்' இடங்களாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் திருநெல்லி, மீனங்காடி, மானந்தவாடி பகுதிகளும் ஏற்கனவே ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதனால், ஊருக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு வந்து தரப்படுகிறது.மேலும், நீலகிரியில், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதியில் இருந்து, வயநாடு பகுதிக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்பவர்களுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி சுகாதார துறையினர் கூறுகையில்,'வயநாட்டில் எல்லையோர பகுதிகள், 'ஹாட்ஸ்பாட்' என அறிவிக்கப்பட்டதால், நீலகிரி எல்லையில், 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. அரசு அனுமதியுடன் வருபர்கள், முழு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு தான் அனுமதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X