தேர்வு எழுதும் 7,915 மாணவர்கள்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வு எழுதும் 7,915 மாணவர்கள்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Added : மே 14, 2020
Share

ஊட்டி:நீலகிரியில், 7,915 மாணவ மாணவியர், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆண்டு தோறும் மார்ச் துவங்கி ஏப்., முதல் வாரத்தில் முடிவடையும். நடப்பாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குறித்த நேரத்தில் தேர்வு நடக்கவில்லை. வரும், ஜூன், 1ம் தேதி துவங்கி, 12ம் தேதி முடிகிறது.நீலகிரியில் 56 மையங்கள்: ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளை உள்ளடக்கிய பள்ளிகள், குன்னுார் கல்வி மாவட்டத்தில் உள்ளன. மொத்தம், 122 பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 40 மையங்களில் தேர்வு நடக்கிறது. வினாதாள்கள் கொண்டுசெல்லும் துறை அலுவலர்களாக 42 பேர்; பறக்கும் படை அலுவலர்கள் 55 பேர்; கண்காணிப்பாளர்களாக 420 பேர் பணியாற்ற உள்ளனர்.அதேபோல, கூடலுார், பந்தலுார், நெல்லியாளம் உட்பட பகுதிகளை உள்ளடக்கிய, கூடலுார் கல்வி மாவட்டத்தில், 41 பள்ளிகளை சேர்ந்த மாணவ,-மாணவியர், 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். 16 மையங்களில் தேர்வு நடக்கிறது. துறை அலுவலர்களாக 6 பேர்; பறக்கும் படை அலுவலர்கள் 22 பேர்; அறை கண்காணிப்பாளர்கள் 210 பேர் பணியாற்ற உள்ளனர். இந்த இரண்டு கல்வி மாவட்டத்தில், '3,858 மாணவர்கள், 4,057 மாணவியர்,' என, மொத்தம், 7,915 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு அட்டவணை:ஜூன்-1 மொழிப் பாடம்; 3ம் தேதி ஆங்கிலம்; 5ம் தேதி கணிதம்; 6ம் தேதி விருப்ப மொழிப் பாடம்; 8ம் தேதி அறிவியல்; 10ம் தேதி சமூக அறிவியல்; 12ம் தேதி தொழிற்பாடம் நடக்கிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் கூறுகையில்," நீலகிரியில் குன்னுார், கூடலுார் கல்வி மாவட்டத்தில்,தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X