செல்லப்பிராணி எச்சத்தால் 'டைபாய்டு' அபாயம்

Added : மே 14, 2020
Share
Advertisement

நத்தம்:வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் எச்சத்தால் 'டைபாய்டு' காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: செல்லமாக வீட்டில் வளர்க் கப்படும் புறா, 'லவ் பேர்ட்ஸ்' போன்ற பறவைகள் இயற்கை சூழலில் சுதந்திரமாக பறந்து திரிபவை. இரை தேட அதிக நேரம் செலவிடும் இவற்றை கூண்டுகளில் அடைப்பதால், உடல், மனதளவில் பலவீனம் அடையும்.கூண்டுகளில் பறவைகளுக்கு வழங்கப்படும் உணவு 24 மணிநேரத்திற்கும் மேலாகிய பின்பும் அழுகிய நிலையில் உண்ணுவதால் தீங்கு ஏற்படும்.

காபி, டீ, சாக்லேட், ஆப்பிள் விதை, வெங்காயம் போன்றவற்றை வழங்கக் கூடாது. முகத்துக்கு அருகே வைத்து கொஞ்சுதல், முத்தமிடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.செல்லப் பறவைகளான புறா 15 ஆண்டுகள், 'லவ் பேர்ட்ஸ்' 10 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை. சூரியன் உதயமாகி அரை மணி நேரத்திற்குள்ளும், மாலையில் 5 - 6 மணிக்குள்ளும் இரை வழங்க வேண்டும்.

இத்தகைய செல்ல பறவைகளின் வயிற்றில் 'சால்மனல்லா' எனும் பாக்டீரியா உருவாகும். பறவைகளின் எச்சம் மனித வயிற்றுக்குள் புகுந்து விட்டால் டைபாய்டு காய்ச்சல் ஏற்படும். குடிநீரில் கலந்தால் வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X