பொது செய்தி

தமிழ்நாடு

குஞ்சப்பனை சோதனை சாவடி; தீவிர கண்காணிப்பு அவசியம்

Added : மே 14, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடியில்,போதிய கண்காணிப்பு இல்லாததால், சமவெளி பகுதியில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட சமவெளி பகுதியில் இருந்து, கோத்தகிரிக்கு வரும் பலர், சோதனை சாவடியில் இ-பாஸ் காட்டி, பணியில் உள்ளவர்களை 'கவனித்து' விட்டு எவ்வித அச்சமும் இல்லாமல், தங்களது குடும்பத்தினருடன் நேரடியாக காட்டேஜ்களில் தங்குகின்றனர். இதனால், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கோத்தகிரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, இரண்டு தனித்தனி வீடுகளில், 18 பேர் தங்கி இருந்துள்ளனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகளின் நடவடிக்கையால், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எனவே, குஞ்சப்பனை சோதனை சாவடியில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X