பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி; மாஸ்க் அணியவில்லையா? உடனடி அபராதம் விதிக்க பறக்கும்படைக்கு உத்தரவு

Added : மே 14, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், சமூக இடைவெளி; மாஸ்க் அணியாமல் இருப்பவர்களை கண்காணிக்க, 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:நீலகிரியில், நோய் தொற்று காரணமாக தற்போது, சேலாஸ், நஞ்சநாடு அருகே இரு இடங்கள் என, மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. மற்றப்பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும், நகர் மற்றும் கிராமப்புறங்களில் சிறிய துணிக்கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலங்களில் இருந்து இ--பாஸ் அனுமதி என்பது, மண்டல அதிகாரிக்கு வந்தபின், அவர்கள் அனுப்பப்படுவர். இதுவரை, மிசோரமுக்கு, 7 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாநிலம் செல்ல, 1900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.நகரில் இயங்கும், சில பேக்கரிகளில் காலாவதி பொருட்கள் விற்பதாக புகார் வந்தது. ஆய்வும் நடந்துள்ளது. தொடர் ஆய்வில், பொருட்களுக்கு உற்பத்தி தேதி; காலாவதி தேதி இல்லை எனில், அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும். வெளி மாநிலங்களிலிருந்து வர, 213 பேர் பதிவு செய்துள்ளனர். அனுமதி கொடுத்தால் மட்டுமே அவர்கள் வர முடியும். வந்தாலும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள், 7 நாட்கள் தனிமைப்படுத்தபடுவர்.எல்லா கடைகளிலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; 'மாஸ்க்' அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க கூடாது. இவற்றை கண்காணித்து உடனடி அபராதம் விதிக்க, 5 பறக்கும் படை அதிகாரிகள் நகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், கடை காரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நம் மாவட்டத்தில், மூன்று பேர் மட்டுமே, நோய் தொற்றில் உள்ளனர். மற்றவர்கள் பூரண குண மடைந்து விட்டனர். அதனால், மேலும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X