பொது செய்தி

தமிழ்நாடு

ஒருவருக்கு 80 லிட்டர் குடிநீர்

Added : மே 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'திண்டுக்கல் மாநகராட்சியில் தினமும் ஒரு நபருக்கு 80 லிட்டர் வீதம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது' என, கமிஷனர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

திண்டுக்கல் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து 90 லட்சம், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 80 லட்சம் மொத்தம் 1.70 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இதனை 48 வார்டு பகுதி மக்களுக்கு, ஒரு நபருக்கு 80 லிட்டர் வீதம் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் அல்லாத பிற உபயோகத்திற்கு மாநகராட்சியில் உள்ள 160 ஆழ்துளை கிணறு, 430 சிறு மின்விசை இறைப்பான்கள் மூலம் 10 லட்சம் லிட்டர் தினமும் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 4 லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆத்துார் நீர்த்தேக்கம் மற்றும் காவிரியில் இருந்து போதுமான அளவு குடிநீர் பெறப்படுகிறது. கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X