சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி அலுவலகம் முற்றுகை: பிரச்னைக்கு தீர்வு காண குரல்

Added : மே 14, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் மார்க்கெட் வியாபாரிகளுக்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக, குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க்கெட்டில் பொருட்களை விற்பதாக வந்த தகவலால், மாவட்ட நிர்வாக பறக்கும் படை குழுவினர் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தி, ஒரு கடைக்கு அபராதம்
 நகராட்சி அலுவலகம் முற்றுகை:  பிரச்னைக்கு தீர்வு காண குரல்

குன்னுார்:குன்னுார் மார்க்கெட் வியாபாரிகளுக்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக, குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க்கெட்டில் பொருட்களை விற்பதாக வந்த தகவலால், மாவட்ட நிர்வாக பறக்கும் படை குழுவினர் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தி, ஒரு கடைக்கு அபராதம் விதித்தனர்.இதனால், வியாபாரிகளுக்கும், பறக்கும்படையில் இருந்த ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், 'பறக்கும்படை குழுவினர் மிரட்டுவது; ஏற்கனவே, 'சீல்' வைத்த கடைகளின் சாவியை பறிமுதல் செய்து சென்றது; வியாபாரிகள் பாதிப்படைவதால் கடைகள் திறக்க அனுமதிப்பது,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனர் பாலு, ' இந்த பிரச்னையை கூடுதல் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தினார்.தொடர்ந்து கூடுதல் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் கூறுகையில்,'கடைகள் திறக்க, 15ம் தேதி, வியாபாரிகள் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X