குன்னுார்:குன்னுார் மார்க்கெட் வியாபாரிகளுக்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக, குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க்கெட்டில் பொருட்களை விற்பதாக வந்த தகவலால், மாவட்ட நிர்வாக பறக்கும் படை குழுவினர் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தி, ஒரு கடைக்கு அபராதம் விதித்தனர்.இதனால், வியாபாரிகளுக்கும், பறக்கும்படையில் இருந்த ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், 'பறக்கும்படை குழுவினர் மிரட்டுவது; ஏற்கனவே, 'சீல்' வைத்த கடைகளின் சாவியை பறிமுதல் செய்து சென்றது; வியாபாரிகள் பாதிப்படைவதால் கடைகள் திறக்க அனுமதிப்பது,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனர் பாலு, ' இந்த பிரச்னையை கூடுதல் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தினார்.தொடர்ந்து கூடுதல் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் கூறுகையில்,'கடைகள் திறக்க, 15ம் தேதி, வியாபாரிகள் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE