கொரோனா தடுப்பூசி தயாரிப்பு முறை: சீன கணினி நாசக்காரர்கள் திருட முயற்சி?

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை, சீன அரசு ஆதரவு பெற்ற, கணினி நாசக்காரர்கள் திருட முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:அமெரிக்காவில், ஏராளமான விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் ஆய்வு தகவல்களை,
china coronavirus, coronavirus outbreak, corona, covid 19, coronavirus vaccine, hacking

வாஷிங்டன் : அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை, சீன அரசு ஆதரவு பெற்ற, கணினி நாசக்காரர்கள் திருட முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:அமெரிக்காவில், ஏராளமான விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் ஆய்வு தகவல்களை, அமெரிக்காவில் உள்ள, சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், திருட முயற்சிப்பதாக, புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சைபர் குற்றப் பிரிவு வல்லுனர்கள் கருதுகின்றனர். விஞ்ஞானிகள், ஆய்வுத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கணினி, 'சர்வர்'களில், சீன மாணவர்கள் நுழைந்து, தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிகிறது.


latest tamil news
இதுவரையிலும், அத்தகைய முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும், இது தொடர்பாக, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துஉள்ளது. அடுத்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்குப் பின், அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்கப்படும் என, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை, தொடர்ந்து தெரிவித்து வருவதாக, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-மே-202008:21:11 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அடுத்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்குப் பின், அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்கப்படும் என, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். //// Why need to wait for auspicious time ????
Rate this:
Cancel
14-மே-202007:16:09 IST Report Abuse
உஷா வாசுதேவன் எதற்கும் துணிந்த சீனமூளை. அதை முறியடிப்பது போல் நாமும் செயல்பட வேண்டும்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
14-மே-202006:55:23 IST Report Abuse
Nathan Thief will not stop stealing till he is punished severely by chopping off his hands. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X