பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர்கள் ஆன்லைனில் புத்தகம் படிக்கலாம்: நூலகத்துறை ஏற்பாடு

Added : மே 14, 2020
Share
Advertisement
 வாசகர்கள் ஆன்லைனில் புத்தகம் படிக்கலாம்:  நூலகத்துறை ஏற்பாடு

திண்டுக்கல்:ஊரடங்கால் வாசகர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புத்தகம் படிக்க நுாலகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முன்னெச்சரிக்கையாக, தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களும் மூடப்பட்டது. இதனால் நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நுாலக வாசகர்களும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் புத்தகங்களை படிக்க நுாலகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.அண்ணா நுாற்றாண்டு நுாலக இணையதளமான www.annacentenarylibrary.orgல் 'ஆன்லைன் புக் சஜஷன்' பகுதியை கிளிக் செய்து, புத்தக கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி, இமெயில், படிக்க விரும்பும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு, வாசகருக்கு விரும்பிய புத்தகத்தை படிப்பதற்கான 'லிங்க்' அனுப்பப்படும். இந்த சேவை காலை 8:00 முதல் இரவு 9:00 மணி மட்டுமே பயன்படுத்த முடியும் என, நுாலகர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X