பொது செய்தி

தமிழ்நாடு

உலக சுகாதார அமைப்பு அதிகாரி திண்டுக்கல்லில் ஆய்வு

Added : மே 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கொரோனா வார்டில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொற்று நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் சந்தோஷ் ராஜகோபால் திண்டுக்கல் மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். டீன் விஜயகுமார், இணை இயக்குனர் பூங்கோதை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, குணமாகியோர் விவரம், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கினர்.

கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, காசநோய்பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன் உடனிருந்தனர். பழநி அரசு மருத்துவ மனையிலும் கொரோனா வார்டை சந்தோஷ் ராஜகோபால் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X