பொது செய்தி

தமிழ்நாடு

'ஜன் தன்' கணக்கில் பணம் பெற குவிந்த பெண்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement
 'ஜன் தன்' கணக்கில் பணம் பெற குவிந்த பெண்கள்

திண்டுக்கல்:பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மட்டுமே ரூ.500 நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளியோருக்கு மத்திய அரசின் நிவாரணம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு நிவாரணமாக தலா ரூ.500 செலுத்தப் படுகிறது. இத்திட்டத்தில் கணக்கு வைத்துள்ள பெண்கள் வங்கி கிளைகள் அல்லது ஏ.டி.எம்., களில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த 2 மாதமாக பெண்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக கணக்காளருக்கு உடனே குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தில் கணக்கு இல்லாத பெண்களும், 'தங்களுக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை, நிவாரணம் பெற ஏற்கனவே உள்ள கணக்கை, ஜன்தன் திட்டத்திற்கு மாற்ற முடியுமா என்று கேட்டு வங்கிகளுக்கு படையெடுக்கின்றனர்.

வங்கி அதிகாரிகள் கூறியது: ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மட்டுமே ரூ.500 வழங்கப்படும். சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் கிடையாது. அதேபோல், சேமிப்பு கணக்கை 'ஜன்தன்' கணக்கிற்கு மாற்றவும் முடியாது. இக்காரணத்திற்காக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவதை தவிர்க்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X