தமிழ்நாடு

பாதிப்பு :ஊரடங்கால் நத்தத்தில் விழாக்களின்றி : வருமானம் இழந்த நாடக கலைஞர்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement
 பாதிப்பு :ஊரடங்கால் நத்தத்தில் விழாக்களின்றி : வருமானம்  இழந்த நாடக கலைஞர்கள்

நத்தம்:நத்தம் வட்டாரம் மற்றும் அண்டை மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை பகுதி கிராமங்களில் ஆண்டுதோறும் ஏராளமான கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் உட்பட பொது நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

இந் நிகழ்ச்சிகளில் புராண நாடகங்கள் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறும். ஒரு நாடகத்தில் கதாநாயகன், காமெடியன், டான்ஸ், மிருதங்கம், ஆர்மோனியம், ஜால்ரா உட்பட 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இடம் பெறுவர். இவர்களில் பலர் நாடகத்தையே முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர்.கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் ஒன்று கூடும் விழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டு உள்ளன.இதனால் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பின்றி நாடக கலைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நத்தம் கலைஞர் செந்தில் முருகன் கூறியதாவது: நத்தம், மணப்பாறை, பொன்னமராவதி பகுதியினர் குழுவாக செயல்படுகிறோம். சமீபத்தில் சங்கமாக பதிவுசெய்ய முயற்சித்தோம். ஊரடங்கால் முடியாமல் போனது. கொரோனா பற்றி தினமும் வரும் தகவல்களால் வைரஸ் பாதிப்பு நீண்ட நாள் இருக்கும் என தெரிகிறது.

இதனால் விழாக்கள் நடைபெறுவது சந்தேகமே. எங்களை போன்ற பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்க அரசு வழிகாண வேண்டும். அரசு அனுமதித்தால் கொரோனா விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தவும் தயாராக உள்ளோம்' எனக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X