பொது செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையத்தில் தங்கப்பத்திரம் விற்பனை

Added : மே 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட தபால் நிலையங்களில் தங்க சேமிப்பு பத்திரம் மே 15 வரை விற்கப்படுகிறது.

இந்த பத்திரங்கள் அதிகபட்சம் 8 ஆண்டுகளுக்கு பின் முதிர்வடையும். பணமாக மாற்ற
விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு பின் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி தொகையை பெற்று கொள்ளலாம். தங்கப்பத்திர முதலீட்டுக்கு 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு வங்கி கணக்கில் வட்டியும் செலுத்தப்படும். ஒரு கிராம் தங்கப் பத்திரம் ரூ.4 ஆயிரத்து 590 ஆகும். ஒரு நபர்
அதிகபட்சமாக 500 கிராம் வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

அவசர தேவை ஏற்பட்டால் பத்திரத்தை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்றுக்
கொள்ளும் வசதியும் உள்ளது. தங்கப்பத்திரம் வாங்குவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு மட்டுமே அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடு அவசியம்.

வாரிசுதாரரின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள அட்டை சான்றும் தேவை. மத்திய
அரசின் திட்டம் என்பதால் பணத்திற்கு முழு உத்தரவாதம் உண்டு. விரும்புவோர் மே 15 க்குள் இத்திட்டத்தில் சேரலாம் என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X