பொது செய்தி

தமிழ்நாடு

நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி துவக்கம்! பாதிப்பை தடுக்க வலியுறுத்தல்

Added : மே 14, 2020
Share
Advertisement
 நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி துவக்கம்! பாதிப்பை தடுக்க வலியுறுத்தல்

உடுமலை;உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், தென்னை நார் தொழிற்சாலைகள் மீண்டும் உற்பத்தியை துவங்கியுள்ளன; சீசன் மாறிவிட்டதால், தவணை நீடிப்பு, புதிய கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. தென்னை மட்டைகளிலிருந்து மஞ்சி உற்பத்தி செய்து, கயிறு, பிளைவுட், ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. 'கொரோனா' ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த ஒன்றரை மாதமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், தற்போது மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. மத்திய கயிறு வாரிய உறுப்பினர் கவுதம் கூறியதாவது:தென்னை நார் தொழிற்சாலைகளில், மழை குறைந்து, வெயில் அதிகரிக்கும், ஜன., முதல் மே வரை மட்டுமே, தொழிற்சாலைகளில் மஞ்சி முழு உற்பத்தி செய்ய முடியும்.உற்பத்தி தீவிரமாக இருக்கும் காலத்தில், 'கொரோனா' சிக்கல் ஏற்பட்ட நிலையில், விரைவில் பருவ மழை துவங்க உள்ளதால், தொடர்ந்து இயக்க முடியாது.கடந்த, ஒரு ஆண்டாகவே, மூலப்பொருள் உள்ளிட்ட உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், கடும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். தற்போது, கருப்பு மட்டை, ஆயிரம், 1,300 க்கு கொள்முதல் செய்து, 30 கிலோ பேல், 360 முதல் 370 வரை விற்கிறது.தற்போது, மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, ஏறத்தாழ, 350 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகிறது. அதிலும், 50 சதவீதம் உற்பத்தியே செய்யப்படுகிறது. தொழில் சீராக ஒரு ஆண்டு ஆகும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் உரிய உதவிகள் செய்ய வேண்டும்.வங்கி கடன் தவணை செலுத்த ஒரு ஆண்டு நீடிப்பு, புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X