பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விற்கும் நீரா உற்பத்தி நிறுவனம்: முற்றிலும் முடங்கியது நீரா பானம்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நீரா பானம் மற்றும் சர்க்கரை உற்பத்தி முடங்கியுள்ளது.தமிழகத்தில், நீரா உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, நீரா உற்பத்தி மேற்கொண்ட தென்னை விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்தது. குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்பட்டு, மக்கள் கூடும் பொது இடங்களில் நீரா விற்பனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த மூன்று

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நீரா பானம் மற்றும் சர்க்கரை உற்பத்தி முடங்கியுள்ளது.தமிழகத்தில், நீரா உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, நீரா உற்பத்தி மேற்கொண்ட தென்னை விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்தது. குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்பட்டு, மக்கள் கூடும் பொது இடங்களில் நீரா விற்பனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களும், கோவையை சேர்ந்த சில நிறுவனங்களும், நீரா விற்பனையில் ஈடுபட்டு வந்தன.இச்சூழலில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்தும் முடங்கியதால், நீரா விற்பனையும் மாநில அளவில் நிறுத்தப்பட்டது.இதுதவிர, நீரா பானம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட நீரா சர்க்கரை, கருப்பட்டி, கற்கண்டு ஆகியன விற்பனையும் முடங்கியது. இதனால், தென்னை விவசாயிகள், நீரா உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழந்தனர்.நீரா உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'போக்குவரத்து முடக்கப்படட்டதால், விற்பனைக்கு நீரா பானம் கொண்டு செல்வது தடைபட்டது. அதேபோல, நீரா சர்க்கரை, கருப்பட்டி உற்பத்தியும் விற்பனை இல்லாததால், தயாரிப்பு நின்று போனது.நீரா உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், தென்னை சாகுபடியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் போனது.நீரா விற்பனை நின்று போனதால், வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவியுடன், நேரடியாக விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று, காய்கறிகளை கொள்முதல் செய்து, வீடுகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.ஊரடங்கு முடிவுக்கு வந்தால், மீண்டும் நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202023:12:12 IST Report Abuse
Ram pollachi விலை ஏற்றினால் வியாபாரம் இறங்கும் . நியாயமாக தொழில் செய்தால் புலம்ப வேண்டாம். பதனி, நொங்கு விலை கூட அதிகம் வாங்க ஆள் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X