வடமதுரை:மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்தாலும், உடல் வெப்பம் அதிகரித்து வாய்ப்புண், சிறுநீர் தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. அதோடு கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்திக்கு எலுமிச்சை சாறு பருகுவதும் அதிகரித்துள்ளது. தற்போது வரத்து வெகுவாக குறைந்து,தேவை அதிகரித்துஉள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கிலோ ரூ.40 ஆக இருந்த எலுமிச்சை மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்கிறது. காய்கறி கடைகளில் சில்லறை விற்பனையில் பழம் ஒன்றுக்கு ரூ.3 முதல் 6 வரை விற்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE