திண்டுக்கல்:திண்டுக்கல் சிறுமலை, நத்தம், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், தாவரங்கள், மரங்கள், விலங்குகள் உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் 2002 ல் பல்லுயிர் பெருக்க சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தை அமல்படுத்த தேசிய அளவில் பல்லுயிர் பெருக்க ஆணையம், மாநில அளவில் பல்லுயிர் பரவல் வாரியம், உள்ளாட்சி அமைப்புகளில் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இச்சட்டம் தமிழகத்தில் சில காலங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
குழுக்கள் அமைப்பு
கடந்த வாரம் நத்தம், அய்யலுார் வனப்பகுதியில் இருந்து 4 டன் மூலிகைகளை சிலர் திருடி விற்க முயன்றனர். வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் தடுக்கவும், உற்பத்தியை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களிலும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனவர், பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ.,க்கள், இயற்கை ஆர்வலர்கள் இணைந்திருப்பர். வன அலுவலர் கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE