பட்டம் கயிறு அறுந்து பதம் பார்க்குது; மின்வாரியம் அபாய எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டம் கயிறு அறுந்து 'பதம்' பார்க்குது; மின்வாரியம் அபாய எச்சரிக்கை

Added : மே 14, 2020
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், பட்டம் விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கயிறு அறுந்து மின் கம்பிகளில் பட்டம் சிக்குவதால், விபத்துகள் ஏற்படுகிறது.ஊரடங்கு உத்தரவு அமலானதில் இருந்து, பட்டம் விடுவது 'டிரென்ட்' ஆகி வருகிறது. பலரும் சமூக வலைதளங்கள், 'டிக்டாக்'ல் பட்டம் விடுவதை புகைப்படம், வீடியோ எடுத்து பதிவேற்றி வைரலாக்குவதால், தற்போது
 பட்டம் கயிறு அறுந்து 'பதம்' பார்க்குது; மின்வாரியம் அபாய எச்சரிக்கை

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், பட்டம் விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கயிறு அறுந்து மின் கம்பிகளில் பட்டம் சிக்குவதால், விபத்துகள் ஏற்படுகிறது.ஊரடங்கு உத்தரவு அமலானதில் இருந்து, பட்டம் விடுவது 'டிரென்ட்' ஆகி வருகிறது. பலரும் சமூக வலைதளங்கள், 'டிக்டாக்'ல் பட்டம் விடுவதை புகைப்படம், வீடியோ எடுத்து பதிவேற்றி வைரலாக்குவதால், தற்போது பொள்ளாச்சி, ஆனைமலையில் பட்டம் பறக்க விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மைதானம், வீட்டு மாடிகளில் நின்று பட்டம் விடுகின்றனர்.அதே சமயம், கயிறு அறுந்து காற்றில் பறக்கும் பட்டத்தால், விபத்துகள் ஏற்படுகிறது. பல இடங்களில் மின் கம்பிகளில் சிக்கி, பட்டத்தின் கயிறு மின்கம்பிகளை ஒன்றோடு ஒன்று பிணைப்பதால், மின் விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகனங்களிலும், வாகனம் ஓட்டுவோர் மீது கயிறு சிக்கி, விபத்து ஏற்படுகிறது. போலீசார் கண்காணித்து, பட்டம் விடுவோரை கட்டுப்படுத்த வேண்டும்.அங்கலக்குறிச்சி மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் கூறியதாவது:பட்டம் அறுந்து, மின்கம்பிகளில் சிக்கி கம்பிகளை ஒன்றோடு ஒன்று பிணைப்பதால், 'எல்.டி.' கம்பியாக இருந்தால் 'பீஸ்' போகும், 'எச்.டி' கம்பியாக இருந்தால் தீப்பிடித்து எரியும். இதனால், 'டிரான்ஸ்பார்ம்'ல் பிரச்னை ஏற்படும், பெரும் மின் விபத்து ஏற்படும். மேலும், பட்டத்தின் கயிறு ஈரமாக இருந்தாலோ அல்லது 'மாஞ்சா' கயிறாக இருந்தாலோ, கயிறில் மின்னோட்டம் இருக்கும். கயிற்றை தொட்டாலும் 'ஷாக்' அடிக்கும். தகவல் கிடைத்ததும், மின்சாரத்தை தடை செய்து, மின் கம்பியில் இருந்து பட்டத்தை அகற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை பட்டத்தை அகற்றும் போதும், மின்வாரிய பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். பாதுகாப்பு கருதி பட்டம் விடுவதை மக்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, உட்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X