உடுமலை:உடுமலை, மலைவாழ் மக்களுக்கு, கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.'கொரோனா' பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் சார்பில், மளிகைப்பொருட்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பல உதவிகளும் வழங்கப்பட்டன.மலைவாழ் மக்களும் இதனால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் வாசவி கிளப் சார்பில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தளிஞ்சி மற்றும் தளிஞ்சி வயல் பகுதிகளில் உள்ள, 179 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.அப்பகுதி பள்ளி ஆசிரியர், கலிலியோ அறிவியல் கழகத்தினர், சுற்றுசூழல் சங்கத்தினர், வாசவி கிளப் உறுப்பினர்கள் பொருட்களை வழங்கினர். மேலும், அப்பகுதி மக்கள், துாய்மை பணிகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE