பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழு; கட்டுப்படுத்த வேளாண்துறை 'அட்வைஸ்'

Added : மே 14, 2020
Share
Advertisement

ஆனைமலை:மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கோவை வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதிலும், கூடுதல் வருமானத்துக்காவும், கால்நடை தீவன தேவைக்காகவும் விவசாயிகள், மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர்.தற்போது, சித்திரை பட்டத்தில், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்காச்சோளத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழுக்களை அழிக்க வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:'ராணுவப் படைப்புழு' என அழைக்கப்படும் படைப்புழு, மக்காச்சோளம், சோளம், கரும்பு உள்பட, 80 வகையான பயிர்களில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இதில், மக்காச்சோளத்தில் அதிக தாக்குதலை ஏற்படுத்துகிறது.கூட்டாக முட்டையிட்டு அதிலிருந்து வெளிவரும் புழுக்கள், மக்காச்சோள பயிரின் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்வதால், பயிரில் பச்சையம் பாதிக்கும். பயிர் விதைப்பு செய்து, 15 நாட்களானதும் தாக்குதலை ஏற்படுத்த துவங்கி, பயிர் அறுவடை வரையிலும் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், 40 சதவீதம் மகசூல் பாதிக்கும்.விதைப்புக்கு முன்பு, ஒரு எக்டருக்கு, 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்தி, ஆழமாக உழவு மேற்கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் 'பவேரியா பேசியானா' நுண்ணுயிர் கொல்லி அல்லது, பத்து கிராம் 'தயோமீதாக்சம்' 30 சதம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ளலாம். போதிய அளவு பயிர் இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.விதைத்த, 15ம் நாள், பத்து லி., நீரில், வேப்ப எண்ணெய் ஒரு சதம் 20 மி., கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் உள்ளதா என கண்டறிய எக்டருக்கு, 12 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும்.தட்டை, எள், சோளம், சூரியகாந்தி, சாமந்திப்பூ உள்ளிட்டவையை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம், நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்து, படைப்புழுக்களை அழிக்கும்.'மெட்டாரைசியம் அனிசோபிலா' உயிர் பூச்சிக்கொல்லியை, எக்டருக்கு நான்கு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். படைப்புழு தாக்குதல் காணப்பட்டால், விவசாயிகள் உடனடியாக அந்தந்த வேளாண் அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X