பொது செய்தி

தமிழ்நாடு

'உஜ்வாலா' திட்ட பயனாளிகளுக்கு காஸ் வினியோகத்தில் முன்னுரிமை

Added : மே 14, 2020
Share
Advertisement
 'உஜ்வாலா' திட்ட பயனாளிகளுக்கு காஸ் வினியோகத்தில் முன்னுரிமை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில், 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, சிலிண்டர் வினியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, நாடு முழுக்க உள்ள ஏழை குடும்ப பெண்கள், சமையல் செய்ய விறகு சேகரித்து சிரமப்படுவதை தவிர்க்கவும், புகையால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள், விறகு சேகரிக்க அலைவதால் பெண்களுக்கு ஏற்படும் நேர விரயத்தை தடுக்கவும், சில ஆண்டுகளுக்கு முன், 'உஜ்வாலா' திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே வீட்டில் சமையல் காஸ் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு, இலவச காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது.இணைப்பு பெற்ற பின், உள்ளூர் சமையல் காஸ் முகவர்களிடம், மற்ற வாடிக்கையாளர்களை போல பணம் கொடுத்து சிலிண்டர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செலுத்திய முழுத் தொகையும், அரசு மானியமாக வங்கிக் கணக்கில் அரசால் வரவு வைக்கப்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் 'உஜ்வாலா' திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றன.ஊரடங்கு நிலவும் நிலையில், வருவாயின்றி இருக்கும் அவர்களுக்கு, பதிவு செய்த உடனே சிலிண்டர் வழங்க முகவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன் படி, கிராமங்களில் 'உஜ்வாலா' திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால், வருவாய் இழந்துள்ள மக்கள் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X