பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகல் கடைபிடிக்க சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

Added : மே 14, 2020
Share
Advertisement
 சமூக விலகல் கடைபிடிக்க சுகாதாரத்துறை 'அட்வைஸ்'

வால்பாறை:வால்பாறையில், ஏப்., 1ம் தேதி முதல் எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான எஸ்டேட் தொழிலாளர்கள் பணி நேரத்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் கூறியதாவது:தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கட்டாயம் சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும். தேயிலை பறிக்கும் போதும், எடைபோடும் போதும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். ஒரு நாளைக்கு, 20 முறையாவது கைகளை 'சோப்' போட்டு கழுவ வேண்டும். இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X