பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை ; அமைச்சர், ஜெய்சங்கர் | Jaishankar pitches for collective action by SCO to deal with threat of terror | Dinamalar

'பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை' ; அமைச்சர், ஜெய்சங்கர்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி : 'பயங்கரவாதத்துக்கு எதிராக, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.சீனா தலைமையிலான, இந்த அமைப்பில், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது. அதில்,

புதுடில்லி : 'பயங்கரவாதத்துக்கு எதிராக, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.latest tamil newsசீனா தலைமையிலான, இந்த அமைப்பில், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது. அதில், ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் பேசியதாவது:இந்த பிராந்தியத்தில், நிலப்பரப்புகளாலோ, அரசியல் காரணங்களாலோ, பாதுகாப்பு பிரச்னை இல்லை.


latest tamil news


ஆனால், பயங்கரவாதம்தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதை ஒடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.'கொரோனா' வைரஸ் பரவல் குறித்தும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாக, ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X