பெண்களுக்கு சிலம்பம் அவசியம்!

Added : மே 14, 2020
Share
Advertisement

இப்போதைய சூழ்நிலையில், பெண்களுக்கு தன்னம்பிக்கை வளரவும், தற்காப்புக்காகவும், அனைவரும் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார், சூர்யா: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தான் சொந்த ஊர். நான் பிறந்ததும், அப்பா இறந்து விட்டார். அக்காவையும் என்னையும் அம்மா தான் வளர்த்தாங்க. குடும்ப வறுமையைச் சமாளிக்க, அப்பள பேக்டரி, இட்லிக்கடை, ஓட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் தான், என்னோட வளர்ச்சிக்குக் காரணம்.என் தாய்மாமா ஹரிதாஸ், சிலம்பம் மாஸ்டர்.

சின்ன வயதிலேயே நானும், அக்காவும், அவரிடம் சிலம்பம் கத்துக்கிட்டோம். அவர் தான் எங்களை படிக்க வைத்தார். இப்போது நான் பி.எச்டி., ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு, சிலம்பம் மட்டுமல்ல; ஜிம்னாஸ்டிக், கராத்தே, யோகா, பறையாட்டம் எனப் பல கலைகள் தெரியும். சிலம்பத்தில் மாவட்ட அளவில், 35 போட்டிகள், மாநில அளவில், 25 போட்டிகளிலும் வென்றிருக்கிறேன். தேசிய அளவிலான, 10 போட்டிகளில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். எனக்குத் தெரிந்த கலையை, மற்றவர்களுக்கும், கற்றுக் கொடுக்க நினைத்தேன். இப்போது, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர்.வறுமையில சிக்கித் தவிக்கிற மாணவர்களிடம் கட்டணம் வாங்கறதில்லை;

அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறேன். நான் படிக்கும், சென்னை, ராணிமேரி கல்லுாரியிலும், மாணவியருக்கு, சிலம்பம் கற்றுத் தருகிறேன். தனியார் பள்ளிகளில் கிடைக்கும் வசதி, வாய்ப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. அவற்றை வெளியே கொண்டு வர, சிலம்பம் போன்ற பயிற்சிகள் அமையும். இந்த கால கட்டத்தில், பெண்கள் மீது நடத்தப்படும், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் சீண்டல்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பெண்கள் அவசியம், சிலம்பம் கத்துக்கணும். அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு, சிலம்பம் பயிற்சி அளிக்கப் போயிருக்கேன். அங்கெல்லாம் பெண்களும், சிலம்பத்தை மதித்து, மகிழ்ச்சியாக கத்துக்கறாங்க.

ஆனால், நம்ம ஊரில், சிலம்பம், ஆண்களுக்கான விளையாட்டு என்ற பார்வை தான் உள்ளது.பிற நாடுகளில் சிலம்பத்திற்கு இருக்கும் மரியாதையை பார்க்கும் போது, பெருமையா இருந்தாலும், தீராத மனக்குறையும் எனக்குள் இருக்கிறது.அரசு வேலைவாய்ப்புக்கான பட்டியலில், சிலம்பத்துக்கு இடம் இல்லை. அந்த பட்டியலில் இடம்பெற்றால், தமிழகத்துல இருந்து பலர், தேசிய அளவில் கோப்பைகள் வெல்வது நிச்சயம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X