சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் தவித்த 44 பேர்

Added : மே 14, 2020
Share
Advertisement

கோபி : வெங்காய அறுவடைக்காக, கர்நாடகா மாநிலத்துக்கு சென்ற, 44 பேர், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப் பட்டனர்.

50 நாட்களுக்கு பின் அவர்கள் மீட்கப்பட்டு, பங்களாப்புதுார் மையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் யூனியன், கொங்கர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், கொரோனா தொற்று தலைதுாக்கும் முன், கர்நாடகா மாநில எல்லையில், கூலி வேலைக்கு சென்றனர். அதன்பின் எவரும், ஊர் திரும்பவில்லை என வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.கோபி, ஆர்.டி.ஓ., ஜெயராமன் தலைமையில், வருவாய்த் துறையினர் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

பெரிய கொடிவேரி அருகே வேட்டுவன்புதுாரை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக, மார்ச், 23ல், கர்நாடக மாநிலம், சிக்கல்லா என்ற இடத்துக்கு, வெங்காய அறுவடைக்கு, சென்றிருப்பது தெரியவந்தது. கொங்கர்பாளையம் கிராமம், தமிழ் நகர் பகுதியை சேர்ந்த, மற்றொரு குழுவினர், மார்ச் 13ல், கூலி வேலைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. அனைவரும், ஊரடங்கால், ஊர் திரும்ப முடியாமல், எல்லையில் அவதிப்பட்டனர்.

இப்படி தவித்த, 15 ஆண்கள், 27 பெண்கள், இரு குழந்தைகள் உட்பட மொத்தம், 44 பேரை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு, நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். அனைவரையும், டி.என்., பாளையம் அருகே பங்களாப்புதுார், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மையத்தில் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X