கொரோனாவால், விவசாயிகள், சிறு, குறு தொழில் உரிமையாளர்கள் தான், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இவர்களுக்கு, மின் கட்டணங்களை, நான்கு மாதங்களுக்கு ரத்து செய்ய, உ.பி., முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அதே போல், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாங்கியுள்ள வீட்டு கடன்களுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
-பிரியங்கா , பொதுச் செயலர், காங்.,
நாடு திரும்பும் இந்தியர்கள்
கொரோனாவால், நாடு திரும்ப முடியாமல் தவித்த, வெளிநாட்டு இந்தியர்களை அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், 14 ஆயிரத்து, 800 பேர் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில், 30 ஆயிரம் பேர் அழைத்து வரப்படுவர்.
- ஹர்தீப் சிங் பூரி , விமான போக்குவரத்து அமைச்சர், பா.ஜ.,
அதிகாரத்தை குறைக்க முயற்சி
வைரஸ் பரவல் தொடர்பான நடவடிக்கைகளை, மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அரசே அறிவித்து வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம், ரயில்வே தெரிவிப்பதில்லை. இது, மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கும் செயல்.
- பூபேஷ் பாகேல் , சத்தீஸ்கர் முதல்வர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE