ராஜ்யசபாவின் செயல்பாடு வெங்கையா பெருமிதம்| Dinamalar

ராஜ்யசபாவின் செயல்பாடு வெங்கையா பெருமிதம்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி : -'ராஜ்யசபாவில், கடந்த, 68 ஆண்டுகளில், 39 ஆண்டுகள், எதிர்க்கட்சிகளே அதிக பலத்துடன் இருந்தன. ஆனாலும், சட்டங்களை நிறைவேற்றுவதில், அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். ராஜ்யசபாவின் முதல் அமர்வு துவங்கியதன், 68வது ஆண்டையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெங்கையா நாயுடு
 ராஜ்யசபாவின் செயல்பாடு வெங்கையா பெருமிதம்

புதுடில்லி : -'ராஜ்யசபாவில், கடந்த, 68 ஆண்டுகளில், 39 ஆண்டுகள், எதிர்க்கட்சிகளே அதிக பலத்துடன் இருந்தன. ஆனாலும், சட்டங்களை நிறைவேற்றுவதில், அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்யசபாவின் முதல் அமர்வு துவங்கியதன், 68வது ஆண்டையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:ராஜ்யசபா மற்றும் லோக்சபாவுக்கு, தேர்தல் முறையும், பதவிக் காலமும் வெவ்வேறாக இருக்கின்றன. மசோதாக்கள்அதனால் தான், லோக்சபாவில் பெரும்பான்மை உள்ள கட்சிக்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை இருப்பதில்லை. கடந்த, 1968 - 1970ல், முதல் முதலில், இதுபோன்ற நிலை உருவானது. தொடர்ந்து, 31 ஆண்டுகளுக்கு அது தொடர்ந்தது.இருந்தாலும், சட்டங்களை நிறைவேற்றுவதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ராஜ்யசபாவில், தகுந்த முறையில் விவாதித்து, சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜ்யசபா இதுவரை, 5,472 நாட்கள் கூடியுள்ளது. அதில், 3,857 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.அரசியல் காரணங்களுக்காக, கொள்கைகளுக்காக, சில மசோதாக்கள் எதிர்க்கப்படுவதை, அனைத்து தரப்பும் ஆராய வேண்டும். தடுப்பதற்கும், எதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். ராஜ்யசபாவில், தற்போது, அதிக அளவில் விவாதங்கள் நடக்கின்றன. கடந்த, 1978 - 2014ல், பொதுமக்கள் பிரச்னை குறித்து, 33.54 சதவீத நேரம் விவாதிக்கப்பட்டது. வேதனைகடந்த, 2005 - 2014ல் இது, 41.42 சதவீதமாகவும், 2015 - 2019ல் 46.59 சதவீதமாகவும் உயர்ந்து உள்ளது.

அதே நேரத்தில் தற்போது, சபை முடக்கப்படுவது அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. கடந்த, 1997ம் ஆண்டுவரை, ராஜ்யசபா, 100 சதவீத அலுவல் நேரமும் பணியாற்றியது. அது தற்போது, 61 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த, 29 ஆண்டுகளில், ஒரு முறை கூட, 100 சதவீதம் அமர்ந்ததில்லை. கடந்த, 2018ல் மிகவும் குறைந்தபட்சமாக, 38.63 சதவீத நேரம் மட்டுமே ராஜ்யசபா இயங்கியது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X