தப்லிகி ஜமாத் தலைவர் மீதான வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற எதிர்ப்பு

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : தப்லிகி ஜமாத் தலைவர், மவுலானா சாத் மீதான வழக்கை, தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற, டில்லி போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டில்லியில், கடந்த மார்ச்சில் தப்லிகி ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, டில்லி அரசின் உத்தரவுப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மாநாடு நடத்திய, மவுலானா சாத் மீது, டில்லி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, கன்ஷ்யாம் உபாத்யாயா என்பவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'போதிய கால அவகாசம் இருந்தும், ஊடகங்களில் மவுலானா சாத் படங்களை வெளியிட்ட பிறகும், தலைமறைவாக உள்ள அவரை கண்டுபிடித்து, கைது செய்ய, டில்லி போலீசார் தவறி விட்டதால், இவ்வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுஇருந்தது.

இந்த மனு, நேற்று டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, சித்தார்த் மிருதுள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி போலீசார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ராகுல் மெஹ்ரா, 'வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதால், தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற அவசியமில்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை, வரும், 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202012:05:11 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தலைமறைவானவரை டில்லி போலிஸ் பிடிக்கவிரும்பவில்லை. அதனால் தேசிய புலனாய்விடம் ஒப்படைப்பது சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X