காவிரி ஆற்றில் இறங்கி வந்த உ.பி., தொழிலாளர்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் இறங்கி வந்த உ.பி., தொழிலாளர்கள்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
 காவிரி ஆற்றில் இறங்கி வந்த உ.பி., தொழிலாளர்கள்

மேட்டூர் : கேரளாவிலிருந்து உ.பி., செல்லும் வழியில், காவிரியில் இறங்கி, மேட்டூர் வந்த, வட மாநில தொழிலாளர்கள், பஸ் மூலம் அத்திப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட, 21 பேர், பீஹாரைச் சேர்ந்த, ஆறு பேர் என, 27 தொழிலாளர்கள், கேரளா, பாலக்காடு மாவட்டத்தில், பேக்கரி, ஓட்டல்களில் வேலை செய்து வந்தனர்.ஊரடங்கால், கடைகள் மூடப்பட்டதால், அதன் உரிமையாளர்கள், அவர்களுக்கு, உணவு வழங்கி வந்தனர். பாலக்காடு பயணம்ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால், வட மாநில தொழிலாளர்கள், ஊருக்கு செல்ல முடிவு செய்து, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

போலீசார், உரிய ஏற்பாடு செய்யாததால், வாகனம் மூலம், ஊர் திரும்ப முடிவு செய்தனர். இதன்படி, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு மூன்று ஆட்டோக்களில் பாலக்காடு சென்றனர். அங்கிருந்து கிடைத்த வாகனத்தில் ஏறி, நேற்று காலை, ஈரோடு மாவட்டம், பவானி, லட்சுமிநகர் வந்த, 27 பேரும், அங்கிருந்து கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு வரை செல்ல, பணம் கொடுத்து, மற்றொரு வாகனத்தில் பயணித்தனர்.

பவானியிலிருந்து அம்மா பேட்டை அடுத்த சின்னபள்ளம் வரை வந்த அவர்களை, ஈரோடு போலீசார், சேலம் மாவட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை.காய்ச்சல் பரிசோதனைஇதனால், அந்த தொழிலாளர்கள், காவிரியாற்றில் இறங்கி நடந்து, சோதனைச் சாவடியை கடந்து, சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கூராண்டிபுதுார் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புகுந்து, மேட்டூர் நோக்கி வந்தனர்.இதைக் கவனித்த அப்பகுதி விவசாயிகள், மேட்டூர் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து, தொழிலாளர்களை, மாதையன்குட்டை அரசு பள்ளி அருகே அமர வைத்தனர். அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதால், அவர்களை தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றி, கர்நாடகா எல்லையிலுள்ள அத்திப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X