உச்ச நீதிமன்ற விடுமுறை ரத்து: வழக்குகளை விசாரிக்க உத்தரவு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்திற்கு, மே, 17ம் தேதி தொடங்கும், ஏழு வார கால கோடை விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாட்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், வழக்குகளை விசாரிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கின்போதும், ஊரடங்குக்குப் பின்னும் இருக்க வேண்டிய நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை, நீதிபதி எல்.என்.ராவ் அடங்கிய நீதிபதிகள் குழு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளாவது:மே, 17ம் தேதி முதல், ஏழு வார கால கோடை விடுமுறை தொடங்குகிறது.


latest tamil news



எனினும், நீதிபதிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அவ்விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. அந்நாட்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், தொடர்ந்து வழக்குகள் விசாரிக்கப்படும். வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், வழக்கறிஞர் உடையை, நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட காலம் வரை அணியக் கூடாது. அதுவரை, அணிந்து கொள்ள வேண்டிய உடை குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நீதிமன்றங்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நீதிமன்றங்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரித்து, நீதித்துறை வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்ட நீதிமன்றங்களும், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும்.நீதிமன்ற வளாகத்திற்குள் பிறர் வருவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் எடுக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-மே-202009:33:31 IST Report Abuse
Nallavan Nallavan It is surprising that lords are coming down gracefully.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-மே-202006:49:18 IST Report Abuse
J.Isaac தீர்ப்புகள் நீதியாக நேர்மையாக வழங்கப்படவேண்டும். வாங்கப்படக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X