சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளியூர் செல்லாத மாம்பழங்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம் : வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதாலும், விற்பனைக்கு அனுப்புவதில் உள்ள சிக்கலாலும், மாம்பழம் விலை சரிந்து, விவசாயிகள், வியாபாரிகள் தவிக்கின்றனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில், பிப்ரவரியில் தொடங்கும் மாம்பழ சீசன், ஆகஸ்ட் வரை தொடரும். பழ கடைகள்நடப்பாண்டு மார்ச்சில், சீசன் உச்சத்தை தொட்ட நிலையில், அதே மாதம், 24ல், ஊரடங்கு அமலானது. இதனால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, மாம்பழங்களை வெளியூருக்கு அனுப்ப முடியவில்லை. அத்துடன், பழ மண்டி, காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டதால், வெளியூர் வியாபாரிகள், 'ஆர்டர்' கொடுப்பதை நிறுத்தி விட்டனர். இதனால், மாம்பழம் விலை சரிந்து விட்டது.

பாதி விலைகுறிப்பாக, கடந்தாண்டு, இதே கால கட்டத்தில், அனைத்து ரக மாம்பழமும், கிலோ, 110 முதல், 240 ரூபாய் வரை விற்பனையானது. நடப்பாண்டு, அதில் பாதி விலைக்கே விற்கப்படுகிறது.சேலம் மாங்காய், பழ வியாபாரிகள் சங்க நிர்வாகி சேசாஷலம் கூறுகை யில், ''மாவட்டத்தில், நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் நன்றாக உள்ளது. ''அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. ஊரடங்கால், வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு பழங்களை அனுப்ப முடியாததால், விலை பாதியாக சரிந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X