பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம் வழியாக புறாக்கள் அழகு போட்டி

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓசூர் : இணையதளம் வழியாக நடந்த புறாக்கள் அழகு போட்டியில், ஓசூர் தனியார் நிறுவன ஊழியரின் புறா, முதலிடம் பிடித்தது.

'இந்தியன் பிஜியன் ஒபன் கிளப்' அமைப்பினர், கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்யும் வகையில், இணையதளம் வழியாக, புறாக்களுக்கான அழகு போட்டிகளை நடத்தினர். இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 24 புறாக்கள் பங்கேற்றன. புறாக்களின் கண் பார்வை, இறகுகளின் தன்மை, அழகு மற்றும் நடை ஆகியவை பார்க்கப்பட்டு, அதில் எந்த புறா சிறப்பாக உள்ளது என, 8 முதல், 10ம் தேதி வரை, 'யு டியூப், வாட்ஸ் ஆப், பேஸ்புக்' மூலம், புறாக்களின் புகைப்படம் மற்றும் வீடியோ இடம் பெற செய்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஓசூர் அருகே, கசவுகட்டா பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் தாண்டவ மூர்த்தி வளர்த்து வரும் புறா, முதல் பரிசை தட்டி சென்றது. மொத்தம் பதிவான, 2,956 ஓட்டுகளில், 479ஐ, இந்த புறா பெற்றது. அடுத்து, 417 ஓட்டுகள் பெற்ற, புதுச்சேரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் புறா இரண்டாமிடம், சென்னையை சேர்ந்த தியாகராஜன் புறா, மூன்றாமிடம் பெற்றது. புறா அழகு போட்டியில் பங்கேற்றவர்கள் கட்டிய நுழைவு கட்டணம், கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. தாண்டவமூர்த்தி, தன் புறாவிற்கு முதல் பரிசாக கிடைத்த, 5,000 ரூபாயை, கொரோனா நிதிக்கு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X