பொது செய்தி

இந்தியா

தேசியம் செய்திகள்

Added : மே 14, 2020
Share
Advertisement

சி.ஐ.ஏ.எப்., வீரர்கள் 41 பேர் பாதிப்பு

புதுடில்லி: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், ஹூக்லி ஆற்றின் கரையில், போர்க்கப்பல்களை உருவாக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, 55 வயது உதவி எஸ்.ஐ., உள்ளிட்ட சி.ஐ.ஏ.எப்., எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், 38 பேரிடம், நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வேறு இடங்களில் பணியில் இருந்த மூன்று பேரிடமும், வைரஸ் உறுதியான நிலையில், இந்த பிரிவில், 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் ஆய்வகங்கள் துவக்க முடிவு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், பல்வேறு மாநிலங்களில், புதிய ஆய்வகம் துவங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஆய்வகங்களுக்கு, அனுமதி அளிப்பதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுமதிக்கும் பொறுப்பை, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட, 14 சுகாதார நிறுவனங்களிடம், மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.

ஆயிரத்தை கடந்தது தாராவி பாதிப்பு
மும்பை: ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவி, மஹாராஷ்டிராவின், மும்பை நகரில் உள்ளது. இங்கு, தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு, புதிதாக 66 பேருக்கு, 'கொரோனா' தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,028 ஆக, உயர்ந்துள்ளது. இதுவரை, 40 பேர் பலியாகி உள்ளனர்.

தனிமைபடுத்திக் கொண்ட இரு நீதிபதிகள்
புதுடில்லி: டில்லியில் உள்ள, தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த, 6ல், வழக்கு விசாரணை தொடர்பாக, ஒருவர் நேரில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். அவருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்று வழக்கை விசாரித்த தீஸ் ஹஸாரி நீதிமன்ற மாஜிஸ்டிரேட், தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவரது மனைவி சாகேத், மாவட்ட நீதிமன்றத்தில், மாஜிஸ்டிரேட்டாக உள்ளார். அவரும், தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.
சிறப்பு ரயிலில் மூதாட்டி பலி

பண்டா: குஜராத்தின் வதோதராவிலிருந்து நேற்று, ம.பி.,யின் பாண்டா ரயில் நிலையம் வந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில், கோரக்பூரை சேர்ந்த, 75 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட ரயில்வே அதிகாரிகள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமல், பிரேத பரிசோதனைக்கு டாக்டர்கள் மறுத்து விட்டனர். ---------------------------டில்லி கலவர வழக்கு: போலீசுக்கு, 'நோட்டீஸ்'புதுடில்லி: வடகிழக்கு டில்லியில், கடந்த பிப்ரவரியில் நடந்த கலவரம் தொடர்பாக, போலீசார் கைது செய்த நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் பிருந்தா காரத், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மனு செய்தார். இந்த மனு மீது, மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு, டில்லி போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு, ஜூன், 17 க்கு ஒத்திவைக்கப்பட்டது.காங்., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர் கைது உஜ்ஜைன்: ம.பி.,யின் உஜ்ஜைனில், கொரோனா ஊரடங்கால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மகேஷ் பர்மர் மற்றும் மனோஜ் சாவ்லா ஆகியோர், ஆதரவாளர்கள் சிலருடன் பேரணி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக, எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும், போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டி இழுத்த வாலிபர்இந்துார்: ம.பி.,யின் இந்துாரை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த ராகுல், 40, என்பவர், காளைகள் பூட்டும் வண்டியில், ஒரு காளை இருக்கும் நிலையில், மற்றொரு பகுதியில் அவர் இழுத்து செல்லும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன், அவரது தம்பி உள்ளிட்ட இருவர் அமர்ந்துள்ளனர். குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு காளையை, 5,000 ரூபாய்க்கு விற்றதால், இந்நிலை ஏற்பட்டதாக ராகுல் கூறினார். இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உதவிகள் வழங்க, அதிகாரிகள் ராகுலை தேடுகின்றனர்.கடைகளை சூறையாடிய போலீசார் ஸ்ரீநகர்: ஜம்மு- - காஷ்மீரின் புட்காம் மாவட்டம் நஸ்ருல்லாபோரா கிராமத்தில், கடைகளையும், வீடுகளையும், போலீசார் சூறையாடும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.இதில், கடைகளில் இருந்த பொருட்களை போலீசார் எடுத்து அழிப்பதுடன், வீடுகளையும் சேதப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மே, 8ம் தேதி, பொதுமக்களிடையே நடைபெற்ற மோதலில், போலீஸ் டி.எஸ்.பி., பயாஸ் உசேன் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த அத்துமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிரிக்கெட் தரகர் ஜாமின்: உச்ச நீதிமன்றம் உத்தரவுபுதுடில்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின், மறைந்த முன்னாள் கேப்டன் ஹன்சி குரோன்யே தொடர்புள்ள, கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், தரகராக செயல்பட்டவர் சஞ்சீவ் சாவ்லா. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, இவர் கடந்த பிப்ரவரியில், இந்தியா அழைத்து வரப்பட்டார். அவருக்கு, கடந்த ஏப்ரல், 30ல், விசாரணை நீதிமன்றம், ஜாமின் வழங்கியது. இதை, மே, 6ல், டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து, டில்லி போலீசார், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதன் மீது, பதில் அளிக்குமாறு, சஞ்சீவ் சாவ்லா தரப்புக்கு, உச்ச நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.-------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X