-திருப்பூர், : திருப்பூர் அருகே, குடோனில் பதுக்கி, மது விற்பனை செய்த, தி.முக., நிர்வாகி உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காங்கேயம் மதுவிலக்கு போலீசார், திருப்பூர் ரோடு, ஹாஸ்டல் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த, சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவின் பின் பகுதியில், பெட்டி பெட்டியாக மது வகைகள் இருந்தன. பின்தொடர்ந்து, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களையும் பிடித்து விசாரித்தனர்.
இதில், திருப்பூர் அருகே உள்ள மதுக்கடையில் இருந்து மது கடத்தி வந்து, காங்கேயத்தில் பதுக்கி, நான்கு மடங்கு விலைக்கு விற்பது தெரிந்தது.இந்த விவகாரத்தில், திருப்பூர் பாண்டியன் நகர் மதுக்கடையின் மேற்பார்வையாளர் திருமூர்த்தி, 40, காங்கேயம் நகர, தி.மு.க., பொருளாளர் மகேஷ் ஜெயகுமார், 46, உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.சரக்கு ஆட்டோ, 1,152 மது பாட்டில்கள், கார் மற்றும் மூன்று, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE