நெய்வேலி : என்.எல்.சி.,யில் நடந்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது.
கடலுார் மாவட்டம், என்.எல்.சி., இரண்டாம் தெர்மல் பாய்லரில், கடந்த, 7ல், நீராவி வெளியேறி விபத்து ஏற்பட்டது. எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள், திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், ஷர்புதீன், 54, பாவாடை, 51, சண்முகம், 24, சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்த நாட்களில் இறந்தனர். சிகிச்சை பெற்று வந்த, ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன், 26, நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு இறந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது.
பாலமுருகன் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவாத கடிதம், நேற்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE