இந்தியா

தொழிற்சாலைகளில் பணி நேரம் நீட்டிப்பு திரும்பப் பெற அன்பழகன் கோரிக்கை

Added : மே 14, 2020
Share
Advertisement
புதுச்சேரி; 'இயற்கை பேரிடர் மேலாண்மை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும்' என, புதுச்சேரி அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.அவர் அளித்த பேட்டி:உயிரை பணயம் வைத்து பணிபுரியும் உள்ளாட்சி துறையினருக்கு இம்மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓரிரு நாட்களுக்குள் சம்பளம் வழங்காவிட்டால், உள்ளாட்சித்துறை ஊழியர்களுடன்

புதுச்சேரி; 'இயற்கை பேரிடர் மேலாண்மை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும்' என, புதுச்சேரி அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.அவர் அளித்த பேட்டி:உயிரை பணயம் வைத்து பணிபுரியும் உள்ளாட்சி துறையினருக்கு இம்மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓரிரு நாட்களுக்குள் சம்பளம் வழங்காவிட்டால், உள்ளாட்சித்துறை ஊழியர்களுடன் தலைமைச் செயலகத்தை அ.தி.மு.க., முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல்வர் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடாமல், தமிழகப் பகுதிகளை காரணம் காட்டி பிரச்னைகளை திசை திருப்பி, தனது இயலாமையை மறைத்து வருகிறார்.மாநில திட்டக் குழு கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர், அவரது தலைமையிலான பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்களை அழைக்காதது ஏன்?. எம்.எல்.ஏ.க்களின் கருத்தினை அறிய, பேரிடர் மேலாண்மை கூட்டத்திற்கு அவர்களை அழைக்க வேண்டும்.புதுச்சேரி தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்க தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற மாநில அரசின் அறிவிப்பு, தொழிலாளர்கள் விரோத செயலாகும். உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நியமித்து, ஷிப்ட் முறையில் தொழிற்சாலைகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.12 மணி நேர வேலையை எதிர்த்து காங்., தலைவர் ராகுல் குரல் கொடுக்கும் நிலையில், அதே கட்சியை சேர்ந்த முதல்வர் நாராயணசாமி 12 மணி நேர வேலையை அமல்படுத்தி இருப்பது, காங்., கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இந்த அறிவிப்பை உடனே அரசு திரும்பப் பெற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X