இந்தியா

நகராட்சி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி, உள்ளாட்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றும் 500க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு, வரி வசூல் மூலமே, மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது கொரோனா காரணமாக, அனைத்து வரி வசூலும் நிறுத்தப்பட்டுள்ளதால், நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த 7 நாட்களாக, நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா நடத்தி வந்தனர். அரசு நடவடிக்கை எடுக்காததால், 8வது நாளான நேற்று உள்ளாட்சித் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஊழியர்களுடன் உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். 15ம் தேதிக்குள் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை விலக்கி கொண்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X