இந்தியா

வணிகர் நல வாரியம் தேவை!

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரியில் ஊரடங்கால் முடங்கி உள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் புத்துயிர் பெற அரசு உதவ வேண்டும். வருமானம் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தொழில் வரி, சொத்து வரி, குப்பை வரி, வணிக உரிம வரி போன்றவற்றை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் சிமென்ட், ஸ்டீல், டைல்ஸ், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்கள் போன்றவை அதிகமாக பணம் புழங்கக் கூடிய வியாபாரங்கள். இந்த வியாபாரம் தமிழகத்தில் இருந்து வருவோரால் சூடுபிடித்தது. ஊரடங்கினால் யாரும் வர முடியாததால், ஏற்கனவே நடந்த வியாபாரத்தில் 20 சதவீதம்கூட தற்போது நடக்கவில்லை.ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக வியாபாரம் முடங்கியதால் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

முதல்கட்டமாக, வணிகர் நல வாரியத்தை அரசு உடனே துவக்க வேண்டும். இதன்மூலம், வியாபாரிகளின் நலன்களை பாதுகாக்க முடியும்.புதுச்சேரியில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க, எந்தவித நிபந்தனையுமின்றி வங்கிகள் கடனுதவி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும்.ஊரடங்கை கருத்தில் கொண்டு வர்த்தக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின் கட்டணத்தில் கணிசமான தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X